ஆடி கிருத்திகையை முன்னிட்டு நெல்லை முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

நெல்லை, ஆக.10: ஆடி மாத கிருத்திகையை முன்னிட்டு நெல்லையில் உள்ள முருகன் கோயில்களில் நேற்று சிறப்பு வழிபாடுகள் நடந்தன. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தமிழ் கடவுளான முருகனுக்கு சஷ்டி, கிருத்திகை உள்ளிட்ட தினங்கள் மிகவும் விசேஷமாகமாக கருதப்படுகிறது. மாதம்தோறும் கார்த்திகை நட்சத்திரம் வந்தாலும், ஆடி மாத கார்த்திகை தினம் முக்கியமானதாகும். நேற்று ஆடி கிருத்திகையை முன்னிட்டு நெல்லையில் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன. முருக பக்தர்கள் அதிகாலையில் எழுந்து நீராடிவிட்டு, காலையில் விரதம் இருந்து முருக வழிபாடு நடத்தினர்.

நெல்லையில் உள்ள பாளையஞ்சாலை குமாரசுவாமி கோயில், குறுக்குத்துறை முருகன் கோயில், பாளை மேலவாசல் சுப்பிரமணியசாமி கோயில், வண்ணார்பேட்டை குட்டத்துறை முருகன் கோயில் உள்ளிட்ட பல்வேறு முருகன் கோயில் நேற்று முருகனுக்கு சிறப்பு வழிபாடுகள், அலங்கார பூஜைகள் நடந்தன. யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு, சுவாமிக்கு அபிஷேகம் நடந்தது. சுப்பிரமணிய சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். பக்தர்கள் திரளாக பங்கேற்று முருகனை வழிப்பட்டு சென்றனர். சாலை குமாரசுவாமி கோயிலில் பக்தர்கள் அமர்ந்து கந்த சஷ்டி கவசம், திருப்புகழ் ஆகியவற்றை பாராயணம் செய்தனர். மதியம் முருகன் கோயில்களில் அன்னதானம் நடந்தது.

The post ஆடி கிருத்திகையை முன்னிட்டு நெல்லை முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு appeared first on Dinakaran.

Related Stories: