கழுகுமலை கோயிலில் ஆடிக்கிருத்திகை விழா பக்தர்கள் திரளானோர் தரிசனம்

கழுகுமலை, ஆக. 10: கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் ஆடிக்கிருத்திகை விழா. நேற்று நடந்தது. இதில் பக்தர்கள் திரளானோர் பங்கேற்று தரிசித்தனர். தென்பழநி என்றழைக்கப்படும் பிரசித்திப் பெற்ற குடவரை கோயிலான கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் ஆடிக்கிருத்திகை விழா, நேற்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு உதயமார்த்தாண்ட அபிஷேகம், 6 மணிக்கு மேல் திருவனந்தல் பூஜை, விளா பூஜை, காலசாந்தி பூஜைநடந்தது. 10 மணிக்கு மூலவர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு பல்வேறு விதமான வாசனை திரவியங்களால் அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. மதியம் அன்னதானம் நடைபெற்றது. இரவு 8 மணிக்கு மேல் கழுகாசலமூர்த்தி, வள்ளி தெய்வானையுடன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் பக்தர்கள் திரளானோர் பங்கேற்று தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன், தலைமை எழுத்தர்கள் மாடசாமி, அருண் மற்றும் கோயில் ஊழியர்கள், சீர்பாத தாங்கிகள் செய்திருந்தனர்.

The post கழுகுமலை கோயிலில் ஆடிக்கிருத்திகை விழா பக்தர்கள் திரளானோர் தரிசனம் appeared first on Dinakaran.

Related Stories: