பாலியல் நோக்கமின்றி பெண்ணை கட்டிப்பிடிப்பது குற்றம் அல்ல: பாஜ எம்பி வக்கீல் கோர்ட்டில் வாதம்

புதுடெல்லி: பாலியல் உள்நோக்கமின்றி பெண்ணை கட்டிப்பிடிப்பது குற்றம் அல்ல என்று இந்திய மல்யுத்த கூட்டமைப்பு முன்னாள் தலைவர் பிரிஜ்பூஷன் சரண் சிங்கின் வக்கீல் தெரிவித்துள்ளார். இந்திய மல்யுத்த கூட்டமைப்பு முன்னாள் தலைவரும் பாஜ எம்பியுமான பிரிஜ்பூஷன் சரண் சிங் மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. . இந்த வழக்கு விசாரணை டெல்லி,கூடுதல் முதன்மை மெட்ரோபாலிட்டன் நீதிமன்றத்தில் நேற்று தொடங்கியது. இருவர் மீதும் போலீசார் குற்ற பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

இதையேற்று இருவரின் மீது குற்றச்சாட்டுகளை பதிவு செய்யலாமா என்பது குறித்து நேற்று விசாரணை நடந்தது. இதில், பிரிஜ் பூஷன் சார்பில் ஆஜரான வக்கீல் ராஜிவ் மோகன் கூறுகையில்,‘‘ புகார் கூறியவர்கள் 5 ஆண்டுகள் சுதந்திரமாக சுற்றி விட்டு தற்போது தங்களுக்கு ஆபத்து என்று கூறுவது ஏற்ககூடிய விளக்கமாக இல்லை. வெளிநாடுகளில் நடந்த சம்பவங்கள் குறித்து இங்கு விசாரணை நடத்த முடியாது. 3 குற்றச்சாட்டுகளில் மட்டுமே இந்திய நீதிமன்றங்களில் விசாரணைக்கு உட்படுத்த முடியும். அசோக் ரோடு , சிரி கோட்டை ஆகிய இடங்களில் 2 சம்பவங்கள் நடந்துள்ளன. சிரி கோட்டையில் கட்டி பிடித்தல் சம்பவம் நடந்துள்ளது.பாலியல் உள்நோக்கம் இல்லாமல் ஒரு பெண்ணை கட்டிபிடிப்பது குற்றம் ஆகாது’’ என்றார்.

The post பாலியல் நோக்கமின்றி பெண்ணை கட்டிப்பிடிப்பது குற்றம் அல்ல: பாஜ எம்பி வக்கீல் கோர்ட்டில் வாதம் appeared first on Dinakaran.

Related Stories: