தாலுகா அலுவலகத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு

பரமத்திவேலூர், ஆக.9: பரமத்திவேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட கூடச்சேரியில் குவார்ட்ஸ் மற்றும் பெல்ஸ்பார் குவாரியில், மாவட்ட கலெக்டர் உமா நேற்று ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து புன்செய் இடையார் மேல்முகம் பகுதியில் வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டாக்களுக்கு இணையவழி பட்டா வழங்கிட ஏதுவாக வரன்முறை படுத்தும் பணிகள் மற்றும் பரமத்தி தாலுகா அலுவலகத்தில் நிலுவையில் உள்ள பட்டா மாறுதல் விண்ணப்பங்கள், இணையவழி பட்டா மாறுதல் பணிகள், ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளின் தற்போதைய நிலவரம், முன்னேற்றம் குறித்து வருவாய்த்துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து, பரமத்தி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் உமா, உள் நோயாளிகள், வெளி நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் மகப்பேறு சிகிச்சை, குழந்தைகள் நலப் பிரிவு, மருந்துகள் இருப்பு விபரம், மருத்துவ உபகரணங்கள், தேவையான உட்கட்மைப்பு வசதிகள், பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள், நோயாளிகளின் சராசரி எண்ணிக்கை கர்ப்பிணித் தாய்மார்களின் பரிசோதனைகள் குறித்த பதிவேடுகள் உள்ளிட்ட விபரங்களை பார்வையிட்டு, மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். முன்னதாக நாமக்கல் வட்டம், கோனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மெய்நிகர் வகுப்பறை அமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு, மாணவர்களின் கற்றல் திறன், மாணவர்கள் வருகை உள்ளிட்ட விபரங்களை ஆசிரியர்களிடம் கலெக்டர் உமா கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, பரமத்திவேலூர் தாசில்தார் கலைச்செல்வி, மற்றும் துறைச்சார்ந்த அலுவலர்கள், மருத்துவர்கள், ஆசிரியர்கள் உடனிருந்தனர்.

The post தாலுகா அலுவலகத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: