சென்னை ஏழுமலையான் கோயில் விரிவாக்கத்திற்கு நிலம் வாங்க ரூ.5.11 கோடி நன்கொடை கிடைத்தது: திருப்பதி தேவஸ்தானத்தில் சேகர் ரெட்டி ஒப்படைப்பு

சென்னை: சென்னை தி.நகரில் உள்ள ஏழுமலையான் கோயிலை 3 ஆண்டுகளுக்குள் முழு அளவில் விரிவாக்கம் செய்து பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து முடிக்கும் பணியில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஈடுபட்டுள்ளது. இந்த பணிக்காக கோயில் அருகில் 3 பேருக்கு சொந்தமாக இருக்கும் நிலங்களை சுமார் ரூ.14 கோடியில் வாங்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அதற்காக இதுவரை சுமார் ரூ.8 கோடி அளவிற்கு நன்கொடையாக பணம் வந்துள்ளது.

இந்த பணிக்காக பூதான் என்ற பெயரில் திட்டம் ஒன்றை தொடங்கி தேவஸ்தான நிர்வாகம் நடத்தி வருகிறது. சென்னை கோயில் விரிவாக்க பூதான் திட்டத்துக்கு ரேபிட் கேர் நிறுவனம் ரூ.1.50 கோடியும், வெங்கட சுப்பிரமணியம், நாகராஜன், கோவை சி.ஆர்.கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் சார்பில் தலா ரூ.1 கோடியும், மாரு சரண், செண்பகமூர்த்தி தலா ரூ.20 லட்சமும், நரேஷ் சுப்பிரமணியம்,  பாலகா கெமிக்கல்ஸ் தலா ரூ.10 லட்சமும், நீலாத்ரி பேக்கேஜிங்ஸ் சார்பில் ரூ.1 லட்சமும் என ரூ.5 கோடியே 11 லட்சம் தேவஸ்தானத்தின் சென்னை, புதுச்சேரி மண்டல ஆலோசனை குழு தலைவர் சேகர் ரெட்டியிடம் நன்கொடையாக வழங்கி உள்ளனர்.

அந்த தொகையை சேகர் ரெட்டி நேற்று திருப்பதி மலையில் தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டத்தின்போது அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி, தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி, தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவராக பொறுப்பேற்க இருக்கும் கருணாகர ரெட்டி ஆகியோரிடம் ஒப்படைத்தார்.

The post சென்னை ஏழுமலையான் கோயில் விரிவாக்கத்திற்கு நிலம் வாங்க ரூ.5.11 கோடி நன்கொடை கிடைத்தது: திருப்பதி தேவஸ்தானத்தில் சேகர் ரெட்டி ஒப்படைப்பு appeared first on Dinakaran.

Related Stories: