குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் சுய உதவி குழுவினருக்கு கனநீர் பயிற்சி முகாம்

 

சாயல்குடி, ஆக. 7: தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில். பஞ்சாயத்து பணியாளர்களுக்கு கனநீர் பயிற்சி முகாம் மற்றும் உபகரணம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கடலாடி யூனியன் அலுவலகத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் தகவல் தொடர்பு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு ஜல் ஜீவன் மிஷன் சார்பில், ஊராட்சி செயலர்களுக்கு கனநீர் பயிற்சி முகாம் நேற்று முன்தினம் நடந்தது. நிகழ்ச்சிக்கு பிடிஓ ராஜா தலைமை வகித்தார். குடிநீர் வாரிய இணை பொறியாளர் வடிவேல், உதவி நிர்வாக பொறியாளர் முருகேசன் முன்னிலை வகித்தனர். மகளிர் திட்ட மேலாளர் செந்தில் வரவேற்றார்.

கடலாடி ஒன்றியத்திலுள்ள 60 பஞ்சாயத்துகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த குடிநீர் சுகாதார உறுப்பினர்களுக்கு கனநீர் பரிசோதனை பெட்டி வழங்கி, அவற்றை பயன்படுத்தும் முறை குறித்து நீர் பகுப்பாய்வாளர் தாமரைச்செல்வி பயிற்சி வழங்கினார். கடலாடி ஒன்றியத்தில் கடற்கரை அமைந்துள்ளதால், பெரும்பாலான ஊராட்சிகளில் நிலத்தடி நீர் உவர்ப்பு தன்மையுடன் இருக்கிறது. உள்ளூர் குடிநீர் ஆதாரமாக போர்வெல் அமைக்கும் போது, உவர்ப்பு தண்ணீர் வந்தாலோ, ஏற்கனவே அமைக்கப்பட்ட நீர் அதேபோல் இருந்தாலும், தண்ணீரின் உவர்ப்பு தன்மையை பகுப்பாய்வு செய்து கண்டறிய இந்த பரிசோதனை பெட்டி உதவும் என கூறப்பட்டது.

The post குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் சுய உதவி குழுவினருக்கு கனநீர் பயிற்சி முகாம் appeared first on Dinakaran.

Related Stories: