ரூ.500 கோடி ஊழல் உத்தவ் அணி எம்எல்ஏவிடம் விசாரணை

மும்பை: ரூ.500 கோடி ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக உத்தவ் அணியின் சிவசேனா எம்எல்ஏ ரவீந்திர வாய்கர், மும்பை போலீஸ் விசாரணைக்கு ஆஜரானார். மும்பை மாநகராட்சியால் பூங்கா அமைக்க ஒதுக்கப்பட்ட இடத்தில் 5 நட்சத்திர ஓட்டல் கட்ட அனுமதி பெற்றுத் தந்தது தொடர்பாக உத்தவ் அணியின் சிவசேனா எம்எல்ஏ ரூ.500 கோடி ஊழல் செய்ததாக பாஜ முன்னாள் எம்பி கிரித் சோமையா கடந்த ஏப்ரல் மாதம் குற்றம்சாட்டி இருந்தார்.

இதுதொடர்பாக மும்பை காவல் துறையின் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் எம்எல்ஏ வாய்கர் மற்றும் மும்பை மாநகராட்சி அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். இதன்படி வாய்கர் நேற்று பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் முன்பாக ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். இதுதொடர்பாக இதுவரை எந்த எப்ஐஆரும் பதிவு செய்யப்படவில்லை.

The post ரூ.500 கோடி ஊழல் உத்தவ் அணி எம்எல்ஏவிடம் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: