அரசு கல்லூரியில் ரத்த தான முகாம்

தர்மபுரி, ஆக.5: பென்னாகரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் சுகாதார குழு இணைந்து, இந்திய உடல் உறுப்பு தான தினம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு, நேற்று நடந்தது. முதல்வர் பாக்கியமணி தலைமை வகித்தார். நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளரும், தமிழ்த்துறை தலைவருமான கதிர்வேல் வரவேற்றார். கருத்தரங்கில், ரத்த தான முகாம் நடந்தது. கல்லூரி மாணவ, மாணவிகள் ரத்த தானம் செய்தனர். அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், ஆங்கிலத்துறை தலைவர் சுகவனேஸ்வரன், உடல் உறுப்பு தான உறுதிமொழியை வாசிக்க அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினரும், எலும்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணருமான மருத்துவர் அருண் பிரகாஷ், சமகால மருத்துவ உலகின் அறிவியல் வளர்ச்சியையும், உடல் உறுப்பு தானத்தின் அவசியம், தேவை குறித்தும் பேசினார். ஆங்கிலத் துறைத் தலைவர் ஷகிலா ஷெரிப் நன்றி கூறினார்.

The post அரசு கல்லூரியில் ரத்த தான முகாம் appeared first on Dinakaran.

Related Stories: