டெல்லி, குருகிராமில் சோதனை ஹீரோ நிறுவன தலைவர் வீட்டில் ரூ.25 கோடி பறிமுதல்: அமலாக்கத்துறை அறிவிப்பு

புதுடெல்லி: ஹீரோ மோட்டோகார்ப் நிர்வாகத் தலைவர் பவன் காந்த் முஞ்ஜால் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.25 கோடி மதிப்புள்ள தங்கம், வைர நகைகள், பணம் பறிமுதல் செய்யப்பட்டது என்று அமலாக்கத்துறை அறிவித்துள்ளது. ஹீரோ மோட்டோகார்ப் நிர்வாக தலைவர் பவன்காந்த் முஞ்ஜால் வீட்டில் நேற்று அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது. டெல்லி, குருகிராம் உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனை நடந்தது. 2014-2015 முதல் 2018-2019 வரையிலான காலகட்டத்தில் வெளிநாடுகளுக்கு சுமார் ரூ. 54 கோடி அந்நியச் செலாவணி சட்டவிரோதமாக அனுப்பப்பட்டது. இந்த நிதி முன்ஜாலின் தனிப்பட்ட செலவுகளுக்குப் பயன்படுத்தப்பட்டது. மேலும் சோதனை நடத்தப்பட்ட முஞ்சால், ஹேமந்த் தஹியா, கே ஆர் ​​ராமன் வீடுகள், ஹீரோ மோட்டோகார்ப் லிமிடெட் , ஹீரோ பின்கார்ப் லிமிடெட் இடங்களில் இருந்து வெளிநாட்டு, இந்திய கரன்சிகள், சுமார் 25 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

The post டெல்லி, குருகிராமில் சோதனை ஹீரோ நிறுவன தலைவர் வீட்டில் ரூ.25 கோடி பறிமுதல்: அமலாக்கத்துறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: