அவிநாசி அரசு கல்லூரியில் தரச்சான்று குழு ஆய்வு

 

அவிநாசி, ஆக.2: அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு தரச்சான்று வழங்க ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு (இருபாலர்) என்.ஏ.ஏ.சி தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று குழுவைச் சார்ந்த உறுப்பினர்கள், கர்நாடகா மாநிலம் ஸ்ரீநிவாசா பல்கலைக்கழகம், துணைவேந்தர் ஸ்ரீராமன ஐத்தல், மனிஷா பெல்லா, டெல்லி பென்னட் பல்கலைக்கழகம், பேராசிரியர் மகாராஷ்ட்ரா மாநிலம் மகாவீர் மகாவித்யாலயா, முதல்வர் ராஜேந்திர லோகன்டே ஆகியோர் அவிநாசி அரசு கலைக்கல்லூரியின் தர ஆய்வு மேற்கொள்வதற்காக நேற்று கல்லூரிக்கு வருகை தந்தனர்.

அப்போது கல்லூரி முதல்வர் நளதம். துறைத்தலைவர்கள் வேதியல் சகிலாபானு, கணிப்பொறி அறிவியல் ஹேமலதா, வணிகவியல் செல்வதரங்கினி, வணிக நிர்வாகவியல் அருண், பன்னாட்டுத்துறை வணிகவியல் பாலமுருகன், பொருளியல் பரமேசுவரி, ஆங்கிலம் தாரணி ஆகியோர் வரவேற்றனர். அரசு கலைக்கல்லூரியில் உள்ள ஆய்வகங்கள், நூலகம், ஆவணங்கள், உள்கட்டமைப்பு, விளையாட்டுத்திடல் கட்டமைப்பு, கலையரங்கம் மாணவர்களின் பல்வேறு கலைத்திறன் மற்றும் பேராசிரியர்களின் நேர்த்தியான படைப்பாற்றல் ஆகியவற்றை நேரில் பார்த்து விசாரித்து ஆய்வு மேற்கொண்டனர்.

The post அவிநாசி அரசு கல்லூரியில் தரச்சான்று குழு ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: