விஜயதசமி விடுமுறையையொட்டி ஆழியார், குரங்கு அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

பொள்ளாச்சி: விஜயதசமி விடுமுறையைெயாட்டி  பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அணை மற்றும் குரங்கு அருவிக்கு  சுற்றுலா பயணிகள் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.பொள்ளாச்சியை அடுத்த ஆழியாருக்கு தினமும் குறிப்பிட்ட அளவிற்கு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். முக்கிய பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் சற்று கூட்டம் அதிகளவில் இருக்கும். இதில், இந்த மாதத்தில் கடந்த இரண்டு வாரமாக ஆழியார் பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைவாக காணப்பட்டது. அந்த நேரத்தில் சுற்றுலா பகுதி பல நாட்கள் வெறிச்சோடியதுபோல் இருந்தது.

Advertising
Advertising

 இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக ஆயுத புைஜ மற்றும் விஜயதசமியை விடுமுறையையொட்டி உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்து ஆழியாருக்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். அவர்கள் ஆழியார் அணை, பூங்கா ஆகியவற்றை சுற்றி பார்த்து ரசித்தனர். மேலும், அருகே உள்ள குரங்கு அருவிக்கும் சுற்றுலா பயணிகள் அதிகம் வந்திருந்தனர்.  அருவியில் ரம்மியமாக கொட்டிய தண்ணீரில் சுற்றுலா பயணிகள் நீண்டநேரம் ஆனந்த குளியல் போட்டு மகிழ்ந்தனர். குரங்கு அருவியில் வழகத்ததை விட கூட்டம் அதிகமாக இருந்ததால் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். நவமலை உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் அத்துமீறி வனத்திற்குள் சென்றுள்ளார்களா? என்று வன ஊழியர்கள் காண்காணித்தனர் வருகின்றனர்.

Related Stories: