ஆடி பவுர்ணமி சத்தியநாராயண சிறப்பு பூஜை

மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த கருங்குழி ஸ்ரீராகவேந்திரா சுவாமிகள் பிருந்தாவனத்தில் ஆடிமாதம் பவுர்ணமியை முன்னிட்டு யோகபிரவேசம் செய்து பூட்டிய அறையில் 9 ஆண்டுகளுக்கு மேலாக தவத்தில் அமர்ந்திருக்கும் கருங்குழி பிருந்தாவன் சித்தர் யோகி ரகோத்தமா பக்தர்களை சந்திக்கும் 111வது பவுர்ணமி தரிசன விழா நடைபெற்றது. காலை 11 மணி முதல் 12 மணி வரை சேஷபீடத்தில் தியானத்தில் அமர்ந்திருந்த சித்தருக்கு பக்தர்கள் ஓம் நமசிவாய மந்திர உச்சாடனையுடன் அபிஷேகம் செய்து அருளாசி பெற்றனர்.

அதனை தொடர்ந்து, மக்கள் சுபிஷமுடன் வாழ ஞானலிங்கத்திற்கு பூஜை செய்யப்பட்டு ஸ்ரீ ராகவேந்திரா சுவாமிகள் பிருந்தாவனத்தில் யாகம் வளர்த்து சத்தியநாரயண பூஜை செய்து, மகா தீபாராதனையை பக்தர்களுக்கு காண்பித்தார். ஓய்வு பெற்ற கல்வித்துறை இணை இயக்குனர் பொன்.அம்பலவாணன்,பெரும்பாக்கம் ராமச்சந்திரன், உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். இவ்விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை யோகி ரகோத்தமா சுவாமிகள் அறக்கட்டளையின் முத ன்மை அறங்காவலர் ஏழுமலைதாசன் ஏற்பாடு செய்திருந்தார்.

The post ஆடி பவுர்ணமி சத்தியநாராயண சிறப்பு பூஜை appeared first on Dinakaran.

Related Stories: