இந்திய மல்யுத்த சங்க தேர்தலில் என் குடும்பத்தினர் போட்டியில்லை: பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய பா.ஜ எம்பி பிரிஜ் பூஷண் அறிவிப்பு

புதுடெல்லி: இந்திய மல்யுத்த சங்க தேர்தலில் என் குடும்பத்தினர் யாரும் போட்டியிடப்போவது இல்லை என்று பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய தற்போதைய தலைவர் பிரிஜ்பூஷண் அறிவித்துள்ளார். இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக பா.ஜ எம்பி பிரிஜ் பூஷண் சரண் சிங் உள்ளார். அவர் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்தனர். இதையடுத்து அவர் மீது டெல்லி போலீசார் போக்சோ உள்ளிட்ட வழக்குகளை பதிந்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே புதிய மல்யுத்த சங்க தலைவர் தேர்தல் ஆக.12ம் தேதி நடை பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் எனது குடும்பத்தைச் சேர்ந்த யாரும் தேர்தலில் போட்டியிட மாட்டார்கள் என்று தற்போதைய தலைவர் பிரிஜ் பூஷண் சரண்சிங் தெரிவித்தார். ஆனால் தனது குழுவிற்கு 22 மாநில சங்கங்களின் ஆதரவு உள்ளது என்று தெரிவித்தார். அவர் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் 25 மாநிலங்களில் இருந்து 22 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின்னர் பிரிஜ்பூஷண் கூறுகையில்,’ முதலில் மல்யுத்த சங்க தேர்தல் நடக்கட்டும். அதன் பிறகு யார் வெற்றி பெற்றாலும் அவர்கள் வேலையைச் செய்வார்கள்.ஆனால் இந்த தேர்தலில் எனது குடும்பத்தில் இருந்து யாரும் போட்டியிட மாட்டார்கள்’ என்றார்.

The post இந்திய மல்யுத்த சங்க தேர்தலில் என் குடும்பத்தினர் போட்டியில்லை: பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய பா.ஜ எம்பி பிரிஜ் பூஷண் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: