சட்லஜ் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 2 பஞ்சாப் இளைஞர்கள் பாக். போலீசாரால் கைது

லூதியானா: சட்லஜ் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த 2 பஞ்சாப் இளைஞர்கள் ஆற்றில் அவர்கள் பாகிஸ்தானுக்கு அடித்து செல்லப்பட்டதால், அவர்களை அந்நாட்டு போலீசார் கைது செய்தனர். பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்டத்தைச் சேர்ந்த ரத்தன்பால், ஹவிந்தர் சிங் ஆகிய இருவரும், இந்தியா – பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் ஓடும் சட்லஜ் ஆற்றில் குளித்தனர். அப்போது ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால், அவர்கள் இருவரும் பாகிஸ்தான் எல்லைக்கு அடித்து செல்லப்பட்டனர். அதையறிந்த பாகிஸ்தான் போலீசார், ரத்தன்பால் மற்றும் ஹவிந்தர் சிங்கை கைது செய்துள்ளனர். இந்த தகவலை இந்தியாவின் எல்லைப் பாதுகாப்புப் படைக்கு (பிஎஸ்எப்) தெரிவித்தனர்.

இதுகுறித்து பெரோஸ்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பச்சன் சிங் கூறுகையில், ‘சட்லஜ் ஆற்றில் குளித்த இரண்டு இளைஞர்கள் பாகிஸ்தான் எல்லைக்கு அடித்து செல்லப்பட்டனர். அதனால் அவர்கள் பாகிஸ்தான் ரேஞ்சர்களால் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பாக இரு நாடுகளின் அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இருவரது குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. பாகிஸ்தான் போலீசில் சிக்கியுள்ள இரு இளைஞர்களில் ஒருவருக்கு, போதை பொருள் பழக்கம் உள்ளது. வேண்டுமென்றே பாகிஸ்தானுக்குள் ஊடுருவினரா? என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது’ என்று கூறினார்.

The post சட்லஜ் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 2 பஞ்சாப் இளைஞர்கள் பாக். போலீசாரால் கைது appeared first on Dinakaran.

Related Stories: