ஒன்றிய பாஜ அரசிடம் என்எல்சி விரிவாக்கத்தை கைவிட அண்ணாமலை வலியுறுத்தணும்: சரத்குமார் பேட்டி

சேலம்: ‘என்எல்சி விரிவாக்கத்தை கைவிட, ஒன்றிய பாஜ அரசை அண்ணாமலை வலியுறுத்த வேண்டும்’ என சரத்குமார் தெரிவித்தார். அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் சரத்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு, சேலத்தில் சமத்துவ விருந்து நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், சரத்குமார் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு உணவு பரிமாறி சமத்துவ விருந்தை தொடங்கி வைத்தார். முன்னதாக செய்தியாளர்களிடம் சரத்குமார் கூறியதாவது: விவசாயம் நாட்டின் பலமாக உள்ளது. எ

ன்எல்சி விவகாரம் பூதாகரமாகியிருக்கும் நிலையில், அந்த திட்டத்தை கைவிட ஒன்றிய அரசை அண்ணாமலை வலியுறுத்த வேண்டும். வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலைவிட, 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி தான் நாங்கள் பயணித்து வருகிறோம். புதிய கூட்டணியை முன்னெடுக்கும் எண்ணம் இல்லை. வரும் சட்டமன்ற தேர்தலில், பணமில்லா அரசியல் தான் எனது நோக்கம். ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டோம் என மக்கள் முடிவு செய்தால் போதும். அந்த மாற்றத்தை கொண்டு வர பாடுபடுகிறோம். அது 2026ல் வரும் என நம்பிக்கை உள்ளது. அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. இவ்வாறு தெரிவித்தார்.

The post ஒன்றிய பாஜ அரசிடம் என்எல்சி விரிவாக்கத்தை கைவிட அண்ணாமலை வலியுறுத்தணும்: சரத்குமார் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: