கணவருக்கு எதிராக பலாத்கார வழக்கு தங்கை மூலம் பொய் புகார் தந்த இளம்பெண்ணுக்கு ஒரு மாத சிறை

இடாநகர்: அருணாசலப்பிரதேசத்தில் கிழக்கு சியாங் மாவட்டத்தில் பெண் ஒருவர் கணவரால் தொடர்ந்து குடும்ப வன்முறைக்கு ஆளாகியுள்ளார். இது குறித்து பலமுறை காவல்நிலையத்தில் புகார் கொடுத்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் தனது கணவரை பழிவாங்குவதற்கு திட்டமிட்ட அவர், தனது மைனர் தங்கை மூலமாக கணவர் மீது பாலியல் பலாத்கார புகாரை கொடுத்துள்ளார். இந்த வழக்கு விசாரணை போஸ்கோ நீதிமன்றத்தின் சிறப்பு நீதிபதி டாகெங் படோக் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணையில் சம்பந்தப்பட்ட நபர் மீது தொடரப்பட்டது பொய் வழக்கு என்பது நிரூபிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து போஸ்கோ சட்டத்தை தவறாக பயன்படுத்தி பொய் புகார் கொடுக்க வைத்த நபரின் மனைவிக்கு, நீதிபதி ஒரு மாதம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். மேலும் அவருக்கு ரூ.20ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. புகார் கொடுத்தவர் மைனர் என்பதால் அவருக்கு தண்டனை எதுவும் வழங்கப்படவில்லை.

The post கணவருக்கு எதிராக பலாத்கார வழக்கு தங்கை மூலம் பொய் புகார் தந்த இளம்பெண்ணுக்கு ஒரு மாத சிறை appeared first on Dinakaran.

Related Stories: