பாஜக நடைப்பயணத்தில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அழைப்பா?. அண்ணாமலை பரபரப்பு பேட்டி

மதுரை: யாத்திரைக்கு எல்லோரும் வரலாம் என நடைபயணத்திற்கு ஓ.பி.எஸ்.க்கு அழைப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிலளித்தார். மதுரை: தமிழ்நாடு பாஜ தலைவர் அண்ணாமலை, நாளை (28ம் தேதி) முதல் ராமேஸ்வரத்தில் இருந்து தமிழகம் முழுவதும் நடைபயணம் தொடங்குகிறார். இந்த பயணத்தை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைக்கிறார். இந்த நடைபயணம் தமிழகத்தில் உள்ள 234 தொகுதியை சுற்றி சுமார் 100 நாட்கள் வரை நடைபெறும் என்று கூறப்படுகிறது. அண்ணாமலை நாளை நடைபயணத்தை தொடங்குவதையொட்டி ராமேஸ்வரத்தில் தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது; 168 நாட்களில் 234 தொகுதிகளில் 1,700 கி.மீ தூரம் நடைபயணம் மேற்கொள்ள உள்ளேன். 5 கட்டங்களாக பாத யாத்திரை நடைபெற உள்ளது; ஜனவரி 20ம் தேதிக்குள் 234 தொகுதிகளிலும் பாத யாத்திரையை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. என் மண், என் மக்கள் யாத்திரையின் தொடக்கத்தில் சில தலைவர்களும் முடிவில் சில தலைவர்களும் பங்கேற்பர். பாத யாத்திரையின் போது 10 இடங்களில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. 10 இடங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் ஒன்றிய அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். நடைபயண தொடக்க விழாவில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்பது உறுதியாகவில்லை.

பாஜகவின் ஆட்சி கால சாதனைகள் குறித்து 1 லட்சம் புத்தகங்கள் விநியோகிக்க உள்ளோம். விளை நிலங்களை ஜேசிபி வைத்து அழிக்கும் என்.எல்.சி.யின் செயல் கண்டனத்திற்குரியது. என்எல்சி விரிவாக்கம் தேவை, ஆனால் அதை முறையாக செய்ய வேண்டும். மணிப்பூர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் அரசியல் செய்கின்றன என கூறினார். தொடர்ந்து நடைபயணத்திற்கு ஓ.பி.எஸ்.க்கு அழைப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர்; யாத்திரைக்கு எல்லோரும் வரலாம்; தமிழகம் நன்றாக இருக்க வேண்டும் என விரும்புபவர்கள் யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம் என கூறினார்.

The post பாஜக நடைப்பயணத்தில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அழைப்பா?. அண்ணாமலை பரபரப்பு பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: