ராஜஸ்தான் பெண்கள் குறித்த பேச்சு விவகாரம்; என்னை சிறையில் தள்ளுங்கள் அல்லது சுட்டுத் தள்ளுங்கள்: பதவி பறிபோன மாஜி அமைச்சர் ஆவேசம்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் பெண்கள் குறித்து பேசியதால் பதவி பறிபோன அமைச்சர், ‘என்னை சிறையில் தள்ளுங்கள் அல்லது சுட்டுத் தள்ளுங்கள்’ என்று ஆவேசமாக கூறினர். ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் நிலையில், அம்மாநில அமைச்சர் ராஜேந்திர குடா கடந்த சில நாட்களுக்கு முன் பேசுகையில், ‘ராஜஸ்தானில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன, மணிப்பூர் பிரச்னை குறித்து பேசுவதற்கு பதிலாக, நாம் சுயபரிசோதனை செய்ய வேண்டும்’ என்று கூறினார். அதனால் அவரை அமைச்சரவையில் இருந்து முதல்வர் கெலாட் நீக்கினார்.

பதவி பறிபோன ராஜேந்திர குடா, மாநில அரசுக்கு எதிராக தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். ஜுன்ஜுனு மாவட்டம் உதய்பூர்வதி சட்டமன்றத் தொகுதியில் ஒட்டக யாத்திரை மேற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில், ‘சட்டசபையில் பேசுவதற்கு எனது உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. நான் மக்கள் மன்றத்தை நாடவுள்ளேன். ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களில் சிலர் பாலியல் பலாத்கார குற்றவாளிகளாக உள்ளனர். என்னை சிறையில் தள்ளுங்கள் அல்லது என்னை சுட்டுத் தள்ளுங்கள்’ என்று ஆவேசமாக கூறினார்.

The post ராஜஸ்தான் பெண்கள் குறித்த பேச்சு விவகாரம்; என்னை சிறையில் தள்ளுங்கள் அல்லது சுட்டுத் தள்ளுங்கள்: பதவி பறிபோன மாஜி அமைச்சர் ஆவேசம் appeared first on Dinakaran.

Related Stories: