நெய்வேலி: நெய்வேலியில் என்எல்சி நிறுவனம் மேற்கொண்டு வரும் சுரங்க விரிவாக்க பணிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வருகின்றது. சேத்தியாத்தோப்பு, நெய்வேலி, விருத்தாசலம் பகுதிகளில் சாலையில் டயர்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. கொஞ்சிகுப்பம் பகுதியில் அரசு விரைவு பேருந்து மீது கல்வீச்சு கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளது.