கிரேக்கத்தில் கொழுந்து விட்டு எரியும் காட்டுத் தீயால் கடும் பாதிப்பு: வனத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட 2 விமானிகள் உயிரிழப்பு

ஏதென்ஸ்: கிரேக்கத்தில் கொழுந்து விட்டு எரியும் காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுப்பட சிறிய ரக விமானம் திடீரென விபத்தில் சிக்கியதில் 2 விமானிகள் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். உலகின் பருவநிலை மாற்றாததால் ஏற்படும் சீர்கேடுகள் ஐரோப்பிய நாடுகளை கடுமையாக பாதித்து வருகிறது. குறிப்பாக கிரேக்க நாட்டில் உள்ள அழகிய சுற்றுலா நகரமான ரோடேஷ் தீவு காட்டுத்தீயின் கோர பசிக்கு முழுமையாக இரையாகி உள்ளது. வனப்பகுதியை தொடர்ந்து வீடுகளையும் சூழ்ந்துள்ள தீயை அணைக்கும் பணிகளில் நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

ரோடேஷ் தீவில் உள்ள நகரில் காட்டுத்தீயில் சிக்கி அரியவகை மூலிகை செடிகள், மரங்கள், வனவிலங்குகள் அழிந்து வருகின்றன. மேலும், சுற்றுலா பயணிகள் உள்பட 20,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். வனத்தீயை அணைக்கும் பணிகளில் ராணுவ விமானங்கள், ஹெலிகாப்டர்கள் ஈடுப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், இவா மாகாணத்தில் ரோடேஷ் நகரில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த சிறிய ரக விமானம் ஒன்று கரும்புகையை கக்கியபடி கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் இருந்த 2 விமானிகளும் கருகி உயிரிழந்தனர்.

The post கிரேக்கத்தில் கொழுந்து விட்டு எரியும் காட்டுத் தீயால் கடும் பாதிப்பு: வனத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட 2 விமானிகள் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: