டெல்லியில் இருந்து காதலனை பார்க்க சென்ற பழங்குடியின பெண் 10 பேரால் கூட்டு பலாத்காரம்: ஜார்கண்டில் பயங்கரம்

ராஞ்சி: டெல்லியில் பணியாற்றும் இளம்பெண் ஒருவர், ஜார்கண்டில் உள்ள காதலனை சந்தித்து திரும்பிய ேபாது 10 பேர் கும்பலால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ெடல்லியில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் பழங்குடியின இளம்பெண் ஒருவர், தனது சொந்த ஊரான ஜார்கண்ட் மாநிலம் பாகூருக்கு விடுமுறையை கழிப்பதற்காக வந்தார். மற்றொரு கிராமத்தில் வசிக்கும் தனது காதலனை சந்திப்பதற்காக அந்த பெண் சென்றார். அங்கு காதலனை சந்தித்த பின்னர், தனது வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது இளம்பெண்ணை வழிமறித்த கும்பல், அங்கிருந்து அவரை கடத்திச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தது.

பின்னர் அந்தப் பெண்ணை அங்கேயே விட்டுவிட்டு ஓடிவிட்டனர். பாதிக்கப்பட்ட அந்தப் பெண், போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீஸ் அதிகாரி அஜித் குமார் விமல் கூறுகையில், ‘பழங்குடியின பெண்ணை 8 முதல் 10 பேர் கும்பல் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்தில் பலமணி நேரமாக கிடந்த அந்தப் பெண், மறுநாள் காலை சுயநினைவு திரும்பியதும் தனது கிராமத்திற்கு வந்துள்ளார்.

அங்குள்ள மக்களிடம் தனக்கு நேர்ந்த கொடுமையை விவரித்தார். இதையடுத்து கிராம மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். மேலும் பாதிக்கப்பட்ட பெண் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், அந்தப் பெண்ணின் காதலன் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குபதியப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் அந்தப் பெண்ணின் காதலனுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. தற்போது காதலனும் தலைமறைவாகி உள்ளதால், குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் தேடி வருகிறோம்’ என்றார்.

The post டெல்லியில் இருந்து காதலனை பார்க்க சென்ற பழங்குடியின பெண் 10 பேரால் கூட்டு பலாத்காரம்: ஜார்கண்டில் பயங்கரம் appeared first on Dinakaran.

Related Stories: