இந்திய-அமெரிக்க தலித் ஆர்வலர் மிலிந்த் மக்வானா மறைவு

வாஷிங்டன்: அமெரிக்காவின் கலிபோர்னியாவில் சாதி பாகுபாட்டை வெளிப்படையாக தடை செய்யும் மசோதா, கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மாநிலத்தின் செனட் நீதித்துறைக் குழுவால் கடந்த ஏப்ரல் மாதம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா தலித் மக்களுக்கு எதிரானது என்று பிரபல இந்திய அமெரிக்க தலித் செயற்பாட்டாளர் மிலிந்த் மக்வானா கலிபோர்னியா சட்டமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். இந்நிலையில், இது தொடர்பாக குபெர்ட்டினோவில் நடந்த நகர கவுன்சில் கூட்டத்தில் இந்த மசோதா குறித்து ஆர்வத்துடன் பேசிக் கொண்டிருந்த அவர் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு காலமானார். இது அமெரிக்க இந்து சமூகத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அன்றைய நாள் முழுவதும் அவர் இது தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

The post இந்திய-அமெரிக்க தலித் ஆர்வலர் மிலிந்த் மக்வானா மறைவு appeared first on Dinakaran.

Related Stories: