ராம நவமி வன்முறை என்ஐஏ விசாரிக்க அனுமதி: மே.வங்க அரசு மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: ராமநவமி தினத்தில் நடந்த வன்முறையை என்ஐஏ விசாரிக்க உத்தரவிட்ட உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்த மேற்குவங்க அரசு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ராம நவமி பண்டிகை இந்த ஆண்டு கடந்த மார்ச் 30ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகையின் போது மேற்குவங்காளத்தின் ஹவுரா மாவட்டம் ஷகிப்பூர் மற்றும் ஹூக்ளி மாவட்டம் ரிஷாரா பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறியது. இந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் என்ஐஏ விசாரணைக்கு உத்தரவிட்டப்பட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து மேற்குவங்காள அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனு தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ராமநவமி பண்டிகையில் நடந்த வன்முறை சம்பவங்கள் குறித்து என்.ஐ.ஏ. விசாரணை நடத்த ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய நீதிபதிகள் மறுத்து, மேற்குவங்க அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.

The post ராம நவமி வன்முறை என்ஐஏ விசாரிக்க அனுமதி: மே.வங்க அரசு மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம் appeared first on Dinakaran.

Related Stories: