ஆடிப் பூரத்தை முன்னிட்டு உலக நன்மை வேண்டி கீழ்வேளூர் சிவா விஷ்ணு கோயிலில் குத்து விளக்கு பூஜை

கீழ்வேளூர், ஜூலை 23: நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அருகே கூறத்தாங்குடி கிராமத்தில் சிவா விஷ்ணு கோயில் அமைந்துள்ளது. திருக்கடையூரில் எமனுக்கு ஏற்பட்ட சாபம் நீங்க எமன் லிங்கம் பிடித்து வழிபட்ட ஸ்தலம் என்பது இதன் சிறப்பு. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் உலக நன்மை வேண்டியும், மழை பெய்து விவசாயம் செழிக்கவும் இக்கோயிலில் விளக்கு பூஜை நடைபெறுவது வழக்கம். அதன்படி நிகழாண்டு ஆடி பூரத்தை முன்னிட்டு  குங்குமவள்ளி அம்மனுக்கு குத்து விளக்கு பூஜை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கிற்கு குங்குமம் கொண்டு பூஜை மேற்கொண்டனர். இதன் மூலம் கணவரின் ஆயுள் பலம் கூடும், திருமண தடை நீங்கும், துன்பங்கள் நீங்கும் என்பதும் ஐதீகம். திருவிளக்கு பூஜை முடிவடைந்து அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

The post ஆடிப் பூரத்தை முன்னிட்டு உலக நன்மை வேண்டி கீழ்வேளூர் சிவா விஷ்ணு கோயிலில் குத்து விளக்கு பூஜை appeared first on Dinakaran.

Related Stories: