மணிப்பூர் விவகாரத்தை பொதுவெளியில் விவாதிக்க முடியாது: ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜூ பேட்டி

சென்னை மணிப்பூரில் நடப்பது தீவிரமான பிரச்சனை அது தொடர்பாக பொதுவெளியில் விவாதிக்க முடியாது என்று ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்தார். சென்னை, தரமணியில் உள்ள நேஷனல் இன்ஸ்ட்டியூட் பேஷன் டெக்னாலஜியில் நேற்று ஒன்றிய அரசின் வேலைவாய்ப்பு திருவிழா நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒன்றிய புவி அறிவியல் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ பயணாளர்களுக்கு பணி ஆணைகளை வழங்கினார்.

நிகழ்ச்சிக்கு பின் நிருபர்களிடம் அமைச்சர் கூறியதாவது:10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்ற பிரதமர் மோடியின் வாக்குறுதியும் நிறைவேற்றும் விதமாக ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. பணி ஆணை பெற்றவர்கள் இதை ஒரு வேலையாக மட்டும் பார்க்காமல் நாட்டிற்கான சேவையாக பார்க்க வேண்டும்.

இது மக்களுக்கு அதிக தன்னம்பிக்கை மற்றும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் மேலும் மணிப்பூரில் நடப்பது தீவிரமான பிரச்னை அது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும். எங்களின் கருத்துகளையும் நாங்கள் தெரிவிப்போம், இதனை பொதுவெளியில் விவாதிக்க முடியாது என்றும் ஒருவேளை மணிப்பூர் பற்றி பேசினால், அது எதிர் கருத்தாக மாறிவிடகூடும். இவ்வாறு அவர் கூறினார்.

The post மணிப்பூர் விவகாரத்தை பொதுவெளியில் விவாதிக்க முடியாது: ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜூ பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: