ஞானவாபி மசூதியில் ஆய்வு செய்ய இந்திய தொல்லியல் ஆய்வு நிறுவனத்துக்கு வாரணாசி மாவட்ட நீதிமன்றம் அனுமதி!!

வாரணாசி: ஞானவாபி மசூதியில் ஆய்வு செய்ய இந்திய தொல்லியல் ஆய்வு நிறுவனத்துக்கு வாரணாசி மாவட்ட நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அறிவியல் ஆய்வறிக்கையை ஆக.4-ம் தேதிக்கு முன் வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் நீதிபதி ஆணையிட்டுள்ளார். மசூதியிலுள்ள சிவலிங்கம் போன்ற கட்டுமானத்தை வழிபட அனுமதி கோரி 5 பெண்கள் மனுத் தாக்கல் செய்திருந்தனர். மனுவை விசாரித்த வாரணாசி மாவட்ட நீதிமன்றம் ஞானவாபி மசூதியில் ஆய்வு மேற்கொள்ள அனுமதி அளித்துள்ளது. ஞானவாபி மசூதியில் தொழுகை நடத்த எந்த ஒரு தடையும் இருக்கக்கூடாது வாரணாசி மாவட்ட நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

The post ஞானவாபி மசூதியில் ஆய்வு செய்ய இந்திய தொல்லியல் ஆய்வு நிறுவனத்துக்கு வாரணாசி மாவட்ட நீதிமன்றம் அனுமதி!! appeared first on Dinakaran.

Related Stories: