மதத்தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் நேரில் சந்தித்தனர் பொது சிவில் சட்டத்தில் முஸ்லிம்களின் உரிமைகளை பாதுகாப்பதில் உறுதி:ஜெகன்மோகன், சந்திரபாபு அறிவிப்பு

திருமலை:ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனை முஸ்லிம் மதத்தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் தாடேப்பள்ளியில் உள்ள முகாம் அலுவலகத்தில் சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது பொதுசிவில் சட்டத்துக்கு ஆதரவு அளிக்கக்கூடாது என்று வலியுறுத்தினர். அப்போது முதல்வர் ஜெகன்மோகன் கூறியதாவது: உங்கள் உரிமைகள் மற்றும் மனதை பாதிக்கும் வகையில் இந்த அரசு ஒருபோதும் செயல்படாது. முஸ்லிம் சமூகத்திற்கு எங்கள் ஆட்சி துணையாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

இதேபோல் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபுவை, மங்களகிரியில் உள்ள கட்சி அலுவலகத்தில் சட்ட மேலவையின் முன்னாள் தலைவர் ஷெரீப் தலைமையில் முஸ்லிம் மத தலைவர்கள், பொது சிவில் சட்டத்திற்கு எதிராக தங்கள் ஆதரவை கேட்டு சந்தித்தனர். அப்போது சந்திரபாபு கூறுகையில், ‘நாட்டின் கலாச்சாரத்திற்கு எதிரான பொது சிவில் சட்டத்தில் முஸ்லிம்களின் உரிமைகளை பாதுகாப்பதில் உறுதியாக இருப்பேன்’ என தெரிவித்தார்.

The post மதத்தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் நேரில் சந்தித்தனர் பொது சிவில் சட்டத்தில் முஸ்லிம்களின் உரிமைகளை பாதுகாப்பதில் உறுதி:ஜெகன்மோகன், சந்திரபாபு அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: