வருசநாடு: தேனி மாவட்டம் கோம்பைத்தொழு அருகே உள்ளது சின்னசுருளி அருவி உள்ளது. தற்போது கனமழையின் காரணமாக அருவியில் நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் உசிலம்பட்டி, மதுரை, போடி, கம்பம் போன்ற பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது இதனால் மயிலாடும்பாறை காவல்துறை அதிகாரிகளும் மேகமலை வனத்துறை அதிகாரிகளும் பாதுகாப்பு பணியில் தற்போது ஈடுபட்டு
வருகின்றனர். மேலும் அருவிக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளிடம் வனத்துறை சார்பாக உடமைகள் சோதனை செய்யப்பட்டு அனுப்பப்படுகிறது.
மேலும் பெண்கள் கவனமாக செல்ல வேண்டும் என்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து கோம்பைத்தொழு முன்னாள் கவுன்சிலர் பெருமாள் கூறுகையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வனத்துறை சார்பாக சுற்றுலாபயணிகள் குளிப்பதற்கு தடை விதித்திருந்தனர். இந்நிலையில் கனமழையின் காரணமாக அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது மேலும் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக செல்வதற்கும் வனத் துறை சார்பாக விழிப்புணர்வு செய்து வருகின்றனர். அருவிக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. அத்துடன் படிக்கட்டுகள் கம்பிகள் சேதம் ஏற்பட்டுள்ளது. எனவே, ேதனி மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.