பாஜகவின் ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக இல்லை!: நாட்டின் அனைத்து துறைகளையும் பாஜக நாசம் செய்துவிட்டது..டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் பேட்டி..!!

பெங்களூரு: கடந்த 9 ஆண்டுகளில் பொருளாதாரத்தையும் ரயில்வேயையும் பாஜக அரசு சீரழித்துவிட்டதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். பெங்களூருவில் எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் இன்று 2வது நாளாக நடைபெற்றது. இதில் நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் பாஜகவை வீழ்த்தும் வகையில் 26 எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், கடந்த 9 ஆண்டுகளில் பொருளாதாரத்தையும் ரயில்வேயையும் பாஜக அரசு சீரழித்துவிட்டது.

பாஜக ஆட்சிக் காலத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. பாஜகவின் ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக இல்லை. ஒன்றிய பாஜக ஆட்சியில் விவசாயிகள், ஏழைகள், வர்த்தகர்கள், இளைஞர்கள், தொழிலாளர்கள் என அனைவருமே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பிரதமர் மோடி அனைத்து துறைகளையும் முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வார் என எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ரயில்வே தொடங்கி தற்போது விமான நிலையம் என பல துறைகளை மிக மோசமான நிலைக்கு பிரதமர் மோடி தள்ளிவிட்டார்.

நாட்டு மக்களின் கண்ணீரை துடைக்க பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும். நாட்டின் அனைத்து துறைகளையும் பாஜக நாசம் செய்துவிட்டது என்று கடுமையாக குற்றம்சாட்டினார். ‘இந்தியா’ கூட்டணியில் மேலும் கட்சிகள் இணைந்து கொண்டே வருகின்றன. முக்கிய அரசு துறைகள் தனியார்மயமாகி வருகின்றன என்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சாடினார்.

 

The post பாஜகவின் ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக இல்லை!: நாட்டின் அனைத்து துறைகளையும் பாஜக நாசம் செய்துவிட்டது..டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் பேட்டி..!! appeared first on Dinakaran.

Related Stories: