திருப்பதி கோயிலின் செப்டம்பர் மாதத்திற்கான ஆர்ஜித சேவா தரிசன டிக்கெட் இணையத்தில் வெளியீடு!!

திருமலை: திருப்பதி கோயில் செப்டம்பர் மாதத்திற்கான ஆர்ஜித சேவா தரிசன டிக்கெட் திருப்பதி கோயில் தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது. www.tirupathibalaji.ap.gov.in என்ற இணையதளம் மூலம் பக்தர்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றான திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம்.

இதனால் திருப்பதி ஏழுமலையான் கோயில் எப்பொழுதும் பக்தர்களின் கூட்டத்தால் நிரப்பி வழியும். குறிப்பாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்களின் கூட்டம் அலைமோதும். நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து திருப்பதி ஏழுமலையானை பக்தர்கள் தரிசித்து வருகின்றனர்.

இதனால் திருப்பதிக்கு வரும் பக்தர்கள் முன்கூட்டியே ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் செப்டம்பர் மாதத்திற்கான ஆர்ஜித சேவா தரிசன டிக்கெட் திருப்பதி கோயில் தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது. www.tirupathibalaji.ap.gov.in என்ற இணையதளம் மூலம் பக்தர்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அக்டோபர் மாதம் நடைபெறும் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை ஆகியவற்றுக்கான டிக்கெட்டுகளை ஜூலை 24 ஆம் தேதி காலை 10 மணி முதல் ஆன்லைனின் முன்பதிவு செய்யலாம் எனவும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

The post திருப்பதி கோயிலின் செப்டம்பர் மாதத்திற்கான ஆர்ஜித சேவா தரிசன டிக்கெட் இணையத்தில் வெளியீடு!! appeared first on Dinakaran.

Related Stories: