ஆண்டவன் என்னிடம் கேட்டால் இரண்டே வரம் தான் கேட்பேன்: ராமதாஸ் பேட்டி

திண்டிவனம்: பாட்டாளி மக்கள் கட்சியின் 35வது ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு நேற்று தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் கட்சிக் கொடி ஏற்றி தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு குறித்து தமிழக முதல்வரிடம் ஐந்து முறை பேசி உள்ளேன்.

விரைவில் தமிழக அரசு நல்ல முடிவை எடுக்கும் என நம்புகிறேன். மது மற்றும் புகையிலை இல்லாத தமிழகமாக மாற்றுவதே எனது லட்சியம். மும்மூர்த்திகள் (ஆண்டவன்) என்னிடம் வந்து என்ன வரம் வேண்டும் என்று கேட்டால், ஒரு சொட்டுகூட மது இல்லாத தமிழ்நாடு. மற்றொன்று ஒரு சொட்டு மழைநீர் கூட கடலில் கலக்க கூடாது என வரம் கேட்பேன்’ என்றார்.

The post ஆண்டவன் என்னிடம் கேட்டால் இரண்டே வரம் தான் கேட்பேன்: ராமதாஸ் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: