தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இந்தியா-இங்கி. 11வது சுற்று பேச்சு இன்று தொடக்கம்

புதுடெல்லி: இந்தியா-இங்கிலாந்து இடையேயான தடையற்ற வர்த்தகத்தின் 11வது கட்ட பேச்சுவார்த்தைக்காக வர்த்தக அமைச்சகத்தின் செயலாளர் இன்று இங்கிலாந்து செல்கிறார். இந்தியா-இங்கிலாந்து இருதரப்பு வர்த்தக உறவை வலுப்படுத்த தடையற்ற வர்த்தக ஒப்பந்த திட்டம் பிரதமர் மோடி, இங்கிலாந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனால் தொடங்கப்பட்டது. இது தொடர்பாக இந்திய, இங்கிலாந்து அதிகாரிகள் மட்டத்திலான பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தது. இதன் மூலம் மொத்தமுள்ள 26 விவகாரங்களில் 14 குறித்த முடிவுகள் எடுக்கப்பட்டன. சுற்றுச்சூழல், தொழிலாளர், தரவுகளை உள்ளூர் மயமாக்குதல் உள்பட சர்ச்சைக்குரிய 5 விவகாரங்களில் முடிவு எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டதால், ஒப்பந்தம் இறுதி செய்யப்படாமல் இருந்தது.

இதனிடையே, ஒன்றிய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் கடந்த 11, 12 ஆகிய தேதிகளில் இங்கிலாந்து சென்றார். அப்போது தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக அந்நாட்டின் வர்த்தக அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதைத் தொடர்ந்து, ஒன்றிய வர்த்தக அமைச்சகத்தின் செயலாளர் சுனில் பர்த்வால் இரண்டு நாள் பயணமாக 11வது சுற்று பேச்சுவார்த்தை நடத்த இன்று இங்கிலாந்து செல்கிறார். அப்போது, சர்ச்சைக்குரிய விவகாரங்களில் கவனம் செலுத்தி, இந்த ஒப்பந்தம் கையெழுத்தாக இருப்பதாக சுனில் பர்த்வால் தெரிவித்தார்.

The post தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இந்தியா-இங்கி. 11வது சுற்று பேச்சு இன்று தொடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: