கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கான டோக்கன், விண்ணப்படிவங்கள் விநியோகம் ஜூலை 20ம் தேதி முதல் தொடங்கும் : தமிழக அரசு அறிவிப்பு!!

சென்னை: கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கான டோக்கன் மற்றும் விண்ணப்படிவங்கள் விநியோகம் ஜூலை 20ம் தேதி முதல் தொடங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. குடும்ப தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கப்படும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் வரும் செப்டம்பர் 15ம் தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ளது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் விண்ணப்பப் படிவத்தை தமிழக அரசு ஏற்கனவே வெளியிட்டது. இந்த நிலையில் கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கான திட்ட விண்ணப்பங்களை பெறுதல் மற்றும் விநியோகம் தொடர்பாக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் என்.சுப்பையன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில் 14ம் தேதி முதல் 17ம் தேதி வரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து மண்டலம் முழுமைக்கும் டோக்கன் மற்றும் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 18ம் தேதி முன்பாகவே மண்டலத்தில் உள்ள அனைத்து நியாயவிலை கடை பணியாளர்களுக்கும் 30 பேர் கொண்ட குழுக்கள் ஆன முதன்மை பயிற்சியாளர்கள் மூலம் பயிற்சி அளிக்க வேண்டும் என்றும் முகாம் நடக்கும் இடம் குறித்து நியாயவிலை கடைகளில் தமிழில் தகவல் பலகை அமைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் 18ம் தேதி முதல் குடும்ப அட்டை எண், முகாம் நடக்கும் இடம் உள்ளிட்ட விவரங்கள் விண்ணப்படிவங்களில் எழுத வேண்டும் என்றும் 20ம் தேதி முதல் டோக்கன்கள் வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கான டோக்கன், விண்ணப்படிவங்கள் விநியோகம் ஜூலை 20ம் தேதி முதல் தொடங்கும் : தமிழக அரசு அறிவிப்பு!! appeared first on Dinakaran.

Related Stories: