அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் ரூ.34.65 கோடியில் தொழில்நுட்ப மையம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

தண்டையார்பேட்டை: மின்ட் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் ரூ.34.65 கோடியில் அமைக்கப்பட்ட தொழில்நுட்ப மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். வண்ணாரப்பேட்டையில் உள்ள மின்ட் ஐடிஐயில் தமிழக அரசு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் ரூ.34.65 கோடி மதிப்பீட்டில் டாடா டெக்னாலஜி நிறுவனத்துடன் இணைந்து அமைக்கப்பட்டுள்ள தொழில் 4.0 தொழில்நுட்ப மைய தொடக்க விழா, தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்தது. இதனை, முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். தொடர்ந்து அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் ராயபுரம் எம்.எல்.ஏ.ஐட்ரீம் மூர்த்தி, கோட்டாட்சியர் ரங்கராஜன் பகுதிச் செயலாளர் சுரேஷ், மாமன்ற உறுப்பினர் வேளாங்கண்ணி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் எல்என்டி, ஈசன் என்டர்பிரைசஸ், ஜிப்ரானிக்ஸ், ஜான்சன் லிப்ட் உள்ளிட்ட நிறுவனங்களில் இருந்து 5 மாணவர்களுக்கு பணி ஆணை வழங்கினர். வடசென்னையில் உள்ள அரசு ஐடிஐ கடந்த 10 ஆண்டுகளாக எந்த வளர்ச்சியும் பெறாமல் இருந்தது. திமுக ஆட்சிக்கு வந்தபின், சட்டமன்ற உறுப்பினர், தொழில்துறை அமைச்சர் ஆகியோர் ஆய்வு செய்து முதலமைச்சரிடம் நவீனப்படுத்த கூறியதன் பேரில் தற்போது இந்த தொழிற்பயிற்சி கூடம் நவீனமயமாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

The post அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் ரூ.34.65 கோடியில் தொழில்நுட்ப மையம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: