அரசே கொள்முதல் செய்யக்கோரி தேங்காய் உடைத்து போராட்டம்

 

திருப்புவனம், ஜூலை 13: தமிழ்நாடு தென்னை விவசாயம் சங்க சார்பில் மாநிலம் தழுவிய தேங்காய் உடைக்கும் போராட்டம் அறிவிக்கப்பட்டு நடந்தது. நேற்று திருப்பாச்சேத்தியில் தென்னை விவசாயிகள் சார்பில் தேங்காய் உடைத்து ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில துணை செயலாளர் ஜெயரா, மாவட்டதலைவர் தினேஷ்குமார் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்க மாநில துணை தலைவர் முத்துராமு போராட்டத்தை விளக்கி பேசினார்.

தென்னை வளர்ச்சி வாரிய அலுவலகத்தை மீண்டும் கோவைக்கு மாற்ற வேண்டும். அனைத்து தென்னை மரங்களுக்கும் இன்சூரன்ஸ் செய்யவேண்டும். உரித்த தேங்காய்களை ஒரு கிலோ 50ரூபாய்க்கு அரசே கொள்முதல் செய்ய வேண்டும். கொப்பரை தேங்காய் கிலோ ஒன்றுக்கு ரூ.140 நிர்ணயம் செய்திட வேண்டும். உரம் பூச்சி மருந்து இயந்திரங்களுக்கு மானியத்துடன் வழங்கிட வேண்டும். கேரளாவை போல் தேங்காய் எண்ணெய் ரேஷன் கடையில் மூலம் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது. இதில் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் வீரபாண்டி, மோகன்,விஸ்வநாதன், சக்திவேல், ஈஸ்வரன், அய்யம்பாண்டி உட்பட பலர் பங்கேற்றனர்.

The post அரசே கொள்முதல் செய்யக்கோரி தேங்காய் உடைத்து போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: