எங்கும் ரோபோ, எதிலும் ரோபோ!: சீனாவில் முதியோர்களை கவனிக்க மனித உருவ ரோபோ வடிவமைப்பு..!!

ஷாங்காய்: தொழில்நுட்ப வளர்ச்சி உலகம் முழுவதும் புதிய பாய்ச்சலை ஏற்படுத்தி வரும் நிலையில், சீனாவில் முதியோர்களை கவனித்துக்கொள்ள மனித உருவ ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளது. எங்கும் ரோபோ, எதிலும் ரோபோ என காலச்சூழல் மாறி வரும் நிலையில், சீனாவின் ஷாங்காயை தலமாக கொண்ட ஃபோரியர் இன்டலிஜெண்ட்ஸ் நிறுவனம் புதிய முயற்சியில் இறங்கியிருக்கிறது. சீனாவில் 2035ம் ஆண்டுக்குள் 60 வயதை கடந்தவர்களின் எண்ணிக்கை 2 கோடி 80 லட்சத்தில் இருந்து 40 கோடியாக உயரும் என்று சமீபத்தில் வெளியான மக்கள் தொகைக்கான புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

எனவே அங்குள்ள வயதானவர்களை கவனித்துக்கொள்ளும் வகையில் இந்த மனித உருவ ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளது. மருத்துவ சேவையை வழங்குவது, நோயாளிகளை படுக்கையில் இருந்து சக்கர நாற்காலிக்கு அழைத்துச் செல்வது, பொருட்களை எடுத்துக் கொடுப்பது போன்ற பணிகளை இந்த ரோபோ செய்து தரும் என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது ஆராய்ச்சி நிலையில் இருக்கும் இந்த ரோபோ அடுத்த 3 ஆண்டுகளுக்குள் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post எங்கும் ரோபோ, எதிலும் ரோபோ!: சீனாவில் முதியோர்களை கவனிக்க மனித உருவ ரோபோ வடிவமைப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: