நேபாளத்தில் காத்மாண்டுவில் இருந்து சோலுகும்பு பகுதிக்கு 6 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் மாயம்!

காத்மாண்டு: நேபாளத்தில் காத்மாண்டுவில் இருந்து சோலுகும்பு பகுதிக்கு 6 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் மாயமானது. காலை 10.12 மணிக்கு தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில் ஹெலிகாப்டரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மணாங் ஏர் என்ற நிறுவனத்தின் ஹெலிகாப்டர் இன்று காலை காத்மாண்டுவை நோக்கி சென்றுகொண்டிருந்தபோது திடீரென தொடர்பை இழந்தது. ஹெலிகாப்டர் எங்கே பறந்து கொண்டிருக்கிறது என ரேடார் மூலமாகவும் கணக்கிட முடியவில்லை என்பதாலும் விமானியிடமிருந்து தகவலும் வரவில்லை என்பதாலும் இந்த ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்த ஹெலிகாப்டரில் மொத்தம் 6 பேர் பயணித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 5 பேர் பயணிகள் எனவும் ஒரு விமானி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 5 பயணிகளும் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என நேபாள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மலைப்பாங்கான பகுதிகளில் ஹெலிகாப்டர்  பறந்து செல்லும்போது விபத்திற்குள்ளானதா, ஏன் தொடர்பை இழந்துவிட்டது, ஹெலிகாப்டரில் இருந்தவர்களுக்கு என்ன ஆனது என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் 5 வெளிநாட்டு பயணிகள், ஹெலிகாப்டர் கேப்டன் ஆகியோர் அடங்கிய ஹெலிகாப்டர் மாயமானது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

The post நேபாளத்தில் காத்மாண்டுவில் இருந்து சோலுகும்பு பகுதிக்கு 6 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் மாயம்! appeared first on Dinakaran.

Related Stories: