வங்கதேச பிரதமருக்கு திரிபுரா முதல்வர் அன்னாசி பழம் பரிசு

அகர்தலா: வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு திரிபுரா முதல்வர் அன்னாசி பழங்களை பரிசாக அனுப்பினார். வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா கடந்த மாதம் திரிபுரா முதல்வர் மாணிக் சாகாவுக்கு 500 கிலோ மாம்பழத்தை பரிசாக வழங்கினார். இதையடுத்து நல்லெண்ண நடவடிக்கையாக ஷேக் ஹசீனாவுக்கு 980 கிலோ அன்னாசி பழங்களை திரிபுரா முதல்வர் மாணிக் சாகா நேற்று அனுப்பி வைத்தார்.

100 பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த 980 கிலோ அன்னாசி பழங்களை வங்கதேச எல்லை செக் போஸ்டில் மாநில தொழில்துறை இயக்குனர் தரித் காந்தி சக்மா, இந்திய தூதரக அதிகாரிகளிடம் வழங்கினார். டாக்காவில் உள்ள இந்திய தூதர் ஷேக் ஹசீனாவை நேரில் சந்தித்து அன்னாசி பழங்களை வழங்குவார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post வங்கதேச பிரதமருக்கு திரிபுரா முதல்வர் அன்னாசி பழம் பரிசு appeared first on Dinakaran.

Related Stories: