வேடசந்தூர் ஒன்றியத்தில் புதிய சாலை பணிகள் துவக்கம்

வேடசந்தூர், ஜூலை 9: வேடசந்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட இ.சித்தூர், குளத்துப்பட்டி, நாகையகோட்டை, கோவிலூர் ஊராட்சி பகுதிகளில் முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிய சாலைகள் அமைக்கும் பணிக்கு நேற்று பூமி பூஜை விழா நடந்தது. எம்எல்ஏ காந்திராஜன் கலந்து கொண்டு 10 இடங்களில் பணிகளை துவங்கி வைத்தார். இதில் வடக்கு ஒன்றிய செயலாளர் கவிதாபார்த்திபன், ஒன்றிய குழு தலைவர் சவுடீஸ்வரி கோவிந்தன், நகர செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட கவுன்சிலர்கள் தாமரைச்செல்வி முருகன், தமிழ்ச்செல்வி ராமச்சந்திரன், எரியோடு பேரூராட்சி தலைவர் முத்துலட்சுமி கார்த்திகேயன், நகர செயலாளர் சின்னு என்ற செந்தில்குமார் உள்பட கலந்து கொண்டனர்.

The post வேடசந்தூர் ஒன்றியத்தில் புதிய சாலை பணிகள் துவக்கம் appeared first on Dinakaran.

Related Stories: