தென்காசி தெற்கு மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவராக ஆபத்துகாத்தான் நியமனம்

செங்கோட்டை,ஜூலை 9: தென்காசி தெற்கு மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவராக, செங்கோட்டையை சேர்ந்த முன்னாள் நகர திமுக செயலாளரான பெரு.முத்தையாதேவரின் மகனும், கலைஞர் தமிழ்ச்சங்க செயலாருமான வழக்கறிஞர் ஆபத்துக்காத்தான் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவர் வாகைசந்திரசேகர் நேற்று அறிவித்தார். இதனை தொடர்ந்து நேற்று அவர் தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் ஷெரிப், தென்காசி தெற்கு மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் மாரியப்பன் ,செங்கோட்டை நகரத் துணைச் செயலாளர் ஜோதிமணி, பெர்னாட்ஷா, நாட்டாமை ஆறுமுகம், வேலுமணி, ஓம் சக்தி ஐயப்பன், ராமகிருஷ்ணன், திருமால், டைல்ஸ் மாரியப்பன், ஆசிரியர் மணிகண்டன், ரமேஷ், வேல் சாமி, கண்ணன், பட்டையா, அண்ணாதுரை, நடராஜன், சரவணன், கணேசன், ரெங்கன் உட்பட பலர் உடன் இருந்தனர்.

The post தென்காசி தெற்கு மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவராக ஆபத்துகாத்தான் நியமனம் appeared first on Dinakaran.

Related Stories: