அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சார்பில் கண்புரை விழிப்புணர்வு மாதம் கடைபிடிப்பு

சேலம்: சேலம் விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் கண் ஒளியியல் பிரிவின் சார்பில், கண்புரை விழிப்புணர்வு மாதம் கடைபிடிக்கப்பட்டது. பல்கலைக்கத்தின் வேந்தர் டாக்டர் சரணவன் ஆலோசனையின் பேரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு துறையின் டீன் செந்தில்குமார் தலைமை வகித்து பேசுகையில், ‘கண்புரை விழிப்புணர்வு மாதமானது ஆண்டுதோறும் ஜூன் மாதம் கடைபிடிக்கப்படுகிறது. கண்புரை, பார்வையில் அவற்றின் தாக்கம், முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் சிகிச்சையின் முக்கியத்துவம் குறித்து விளக்கும் வகையில், விழிப்புணர்வு மாதம் கடைபிடிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். தொடர்ந்து துறையை சேர்ந்த மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாதிரி வடிவங்கள் தயாரித்தல், படவிளக்க காட்சி போன்ற போட்டிகள் நடத்தப்பட்டது. இதில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. …

 

The post அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சார்பில் கண்புரை விழிப்புணர்வு மாதம் கடைபிடிப்பு appeared first on Dinakaran.

Related Stories: