வாலாஜாபாத் 2வது வார்டில் பேவர் பிளாக் சாலை பணிகளை பேரூராட்சி மன்ற தலைவர் ஆய்வு

வாலாஜாபாத்: வாலாஜாபாத் பேரூராட்சி 2வது வார்டில், பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியை பேரூராட்சி மன்ற தலைவர் இல்லாமல்லி ஸ்ரீதர் ஆய்வு செய்தார். வாலாஜாபாத் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த 15 வார்டுகளிலும் தமிழக அரசின் பல்வேறு திட்ட பணிகள் முழு விசாக நடைபெற்று வருகின்றன. இருப்பினும் 2வது வார்டு பகுதியில் வளர்ந்து வரும் குடியிருப்புகள் அதிகரித்து வரும் நிலையில், இப்பகுதியில் மழைநீர் வடிகால்வாய், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தர வேண்டும் என இப்பகுதி மக்கள் பேரூராட்சி நிர்வாகத்திடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

அதன் அடிப்படையில், ஜெயலட்சுமி நகர் பகுதியில் கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ.87.50 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன. இப்பணியை பேரூராட்சி மன்ற தலைவர் இல்லாமல்லிஸ்ரீதர் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, சாலை அகலமாகவும், நீளமாகவும் அமைத்து, தரமான சாலையாக விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளிடம் தெரிவித்தார். ஆய்வின்போது பேரூராட்சி மன்ற துணை தலைவர் சுரேஷ்குமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

The post வாலாஜாபாத் 2வது வார்டில் பேவர் பிளாக் சாலை பணிகளை பேரூராட்சி மன்ற தலைவர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: