ரூ.2 கோடி சம்பளம்… வேலைக்குச் செல்ல மறுக்கும் பெண்கள்!

சீனாவின் ஷாங்காய் நகரில் வாழும் பணக்கார பெண் ஒருவர் தன்னைக் கவனித்துக்கொள்ள வருடத்திற்கு ரூ.2 கோடி வரை சம்பளத்திற்கு ஆள் தேவை என செய்தித் தாள்களில் விளம்பரம் கொடுத் திருக்கிறார். ஆனால் இந்த வேலைக்கு ஒருவர் கூட செல்ல ஆர்வம் காட்டவில்லையாம். அதாவது மாதம் 16 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும் என்றும், ஆனால் தன்னை 24 மணி நேரமும் கவனித்துக் கொள்ள வேண்டும் என்றும் அந்த பெண் தெரிவித்துள்ளார். இந்த வேலையில் சேர ஏராளமான நிபந்தனைகள் இருப்பதுதான் பெண் பணியாளர்கள் இந்த வேலையில் சேர தயக்கம் காட்டுவதாகச் சொல்லப்படுகிறது. குறிப்பாக இந்த வேலையில் சேர உயரம் முதற்கொண்டு நிபந்தனையாகக் கூறப்படுகிறது. இதில் சேர விண்ணப்பிப்பவர்கள் 165 செ.மீ உயரம், 55 கிலோ உடல் எடை கொண்டு இருக்க வேண்டுமாம், நேர்த்தியான தோற்றம் மற்றும் சுத்தமாக இருக்க வேண்டும், 12ம் வகுப்பிற்கு மேல் படித்து இருக்க வேண்டும், பாடி ஆடத் தெரிந்து இருக்க வேண்டும் என்று நிபந்தனைகள் அந்த விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறதாம். இதனால் இந்த வேலையில் சுயமரியாதை பறிக்கப்படும் என்றும், மேலும் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருந்துகொண்டு வேண்டிய உதவிகளை செய்துகொடுக்க வேண்டிய நிலை உண்டாகும் என்கிறார்களாம். குறிப்பாக அவர்கள் என்ன சொன்னாலும் செய்தாக வேண்டிய சூழல் உண்டாகும் என்கின்றனராம். சீனாவின் இந்த பணக்கார பெண்ணின் விளம்பரம்தான் உலகம் முழுக்க சுற்றிக்கொண்டிருக்கிறது. மேலும் பலநாட்டுப் பெண்களும் கூட வரலாமா என்று யோசனை இருப்பினும் கொடுக்கப்பட்டுள்ள நிபந்தனைகளும், ஏற்கனவே சீனாவில் இருக்கும் பெண்களின் கருத்துகளுமாக இந்த வேலைக்கு பெண்கள் செல்ல தயக்கம் காட்டி வருகிறார்களாம்.

The post ரூ.2 கோடி சம்பளம்… வேலைக்குச் செல்ல மறுக்கும் பெண்கள்! appeared first on Dinakaran.

Related Stories: