அட்டை கம்பெனியில் பயங்கர தீ விபத்து; பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பழைய பேப்பர் பண்டல்கள் நாசம்: சாத்தூரில் பரபரப்பு

 

சாத்தூர்: விருதுநகர் மாவட்டம், சாத்தூர் கோவில்பட்டி நான்குவழிச் சாலை பெத்துரெட்டிபட்டி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான அட்டை தயார் செய்யும் கம்பெனி செயல்பட்டு வருகிறது. இதன் வளாகத்தில் அட்டை தயார் செய்வதற்கு பயன்படுத்தும் 1,500 டன் பழைய பேப்பர்கள், அட்டைகளை பண்டல்களாக கட்டி அடுக்கி வைத்திருந்தனர். இங்கு நேற்று மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சாத்தூர், கோவில்பட்டி, விருதுநகர் ஆகிய பகுதிகளில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். காற்றின் காரணமாக தீ மளமளவென பரவியது. மேலும் புகை மண்டலமாக காட்சியளித்ததால் தீயை அணைப்பதில் கடும் சிரமம் ஏற்பட்டது. தீ விபத்தில் 500 டன் பழைய பேப்பர்கள் எரிந்து நாசமானது. இதன் மதிப்பு பல லட்சம் மதிப்புடையவை என தெரிய வந்துள்ளது. தீ விபத்திற்கான காரணம் குறித்து சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post அட்டை கம்பெனியில் பயங்கர தீ விபத்து; பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பழைய பேப்பர் பண்டல்கள் நாசம்: சாத்தூரில் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: