சென்னை: இந்தியாவின் 100% பகுதிகளில் பருவமழை தொடங்கிவிட்டது என்றும், வட மற்றும் தென் மாநிலங்களில் வரும் நாட்களில் கன மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியா முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள சூழலில் கடந்த 6 நாட்களுக்கு முன்னரே இந்தியாவின் 100 சதவீத பகுதிகளில் பருவமழை தொடங்கி விட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அதே நேரத்தில் பருவமழை இந்தியாவின் தென் மாநிலமான கேரளாவில் முன்கூட்டியே தொடங்கியிருந்தாலும் 60% மழை குறைவாக காணப்படுவதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரா, கோவா, கொங்கன் கடற்கரை ஜூலை 6ம் தேதி வரை கனமழை பெய்யும் எனவும், வரும் நாட்களில் வட மாநிலங்கள் மற்றும் தென் மாநிலங்களில் கன மழை முதல் அதி கனமழை வரை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், இன்றும், நாளையும் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை மண்டல வானிலை மையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
The post 100% பகுதிகளில் பருவமழை தொடங்கிவிட்டது: வட மற்றும் தென் மாநிலங்களில் வரும் நாட்களில் கனமழை பெய்யும்: இந்திய வானிலை ஆய்வு மையம் appeared first on Dinakaran.