தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்துவது தொடர்பாக நாளை அதிகாரிகளுடன் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆலோசனை

சென்னை: தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்துவது தொடர்பாக நாளை அதிகாரிகளுடன் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆலோசனை மேற்கொள்கிறார். தக்காளி விலையை கட்டுப்படுத்த ரேஷன் கடைகளில் தக்காளியை விற்பனை செய்வது குறித்து ஆலோசிக்கபடும் என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் தக்காளி விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து வருகிறது. சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ ரூ.90 முதல் ரூ.110 வரை விற்பனை செய்யப்பட்டது. இந்த திடீர் விலையேற்றத்தை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு பண்ணை பசுமை காய்கறி கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது.

தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், சென்னை, கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்று மேலும் தக்காளி விலை உயர்ந்துள்ளது. கோயம்பேடு காய்கறி சந்தையில் ரூ.90-க்கு விற்ற தக்காளி, தற்போது மேலும் 10 ரூபாய் உயர்ந்து இன்று ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சில்லரை விற்பனை நிலையங்களில் ரூ.120 முதல் ரூ.130 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடும் வெயில், கனமழை காரணமாக தக்காளி விளைச்சல் பாதிக்கபட்டு வரத்துக் குறைந்துள்ளது. கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்து வருவதால் கடுமையாக விலை உயர்ந்து வருகிறது.

இதனை சமாளிப்படு தொடர்பாக நாளை அதிகாரிகளுடன் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆலோசனை மேற்கொள்கிறார்.

The post தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்துவது தொடர்பாக நாளை அதிகாரிகளுடன் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: