கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் 2வது அணு உலையில் பராமரிப்பு பணி துவக்கம்: மின்உற்பத்தி பாதிப்பு

திருக்கழுக்குன்றம்: கல்பாக்கம் அருகே அணுமின் நிலையம் இயங்கி வருகிறது. இங்குள்ள 2 அணு உலைகள் மூலமாக நாளொன்றுக்கு 440 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த மின்சாரம் மத்திய தொகுப்புக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து மின்தேவை அதிகமுள்ள மாநிலங்களுக்கு பிரித்து அனுப்பப்படுவது வழக்கம். இந்நிலையில், இங்குள்ள முதல் அணு உலையில் கடந்த 2018ம் ஆண்டு தொழில்நுட்ப கோளாறு காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதுவரை சரிசெய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் 220 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், 2வது அணுமின் உலையில் இன்று காலை 45 நாட்களுக்கு பராமரிப்பு பணி துவங்கியது. இதனால் 2வது அணு உலையில் உற்பத்தியாகி வரும் 220 மெகாவாட் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் ஏற்கனவே பழுதான முதல் அணு உலை இதுவரை சரிசெய்யப்படாததாலும், தற்போது 2வது உலையில் பராமரிப்பு பணி காரணமாக இன்று முதல் 220 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் உற்பத்தியாகி வந்த மொத்தம் 440 மின் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

The post கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் 2வது அணு உலையில் பராமரிப்பு பணி துவக்கம்: மின்உற்பத்தி பாதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: