முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க சென்னை சென்ற நீலகிரி மாணவர்கள்

ஊட்டி : நீலகிரி மாவட்டத்திலிருந்து முதலமைச்சர் கோப்பை மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளுக்கு செல்லும் வீரர், வீராங்கனைகளை மாவட்ட கலெக்டர் அம்ரித் வாழ்த்தி சென்னை அனுப்பி வைத்தார். முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் 2023-2024 மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் 06.02.2023 முதல் 24.02.2023 வரை நடைபெற்றது. மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் 30.06.2023 முதல் 25.07.2023 வரை நடைபெற உள்ளது.

மாவட்ட அளவிலான விளையாட்டு பள்ளி, கல்லூரி, பொதுப்பிரிவினர், அரசு உழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளர்கள் என 5 பிரிவுகளில் நடைபெற்றது. மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு சுமார் ரூ.26 லட்சம் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது. மேலும், மாவட்ட அளவிலான போட்டியில், தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவிகள் மாநில அளவிலான விளையாட்டு போட்டியில் சுமார் 454 மாணவ, மாணவிகள் நீலகிரி மாவட்டம் சார்பாக கலந்துக் கொள்ள உள்ளனர். நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற இருக்கும் போட்டிகளில் பங்கேற்பதற்க்காக நீலகிரி மாவட்டத்திலிருந்து 32 வீரர்கள், 32 வீராங்கனைகள் மற்றும் 10 அணி மேலாளர்கள் (கபடி, கையுந்து பந்து, சிலம்பம்) அகிய போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளனர்.

நீலகிரி மாவட்டம், ஊட்டி மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட மைதானத்தில் இருந்து, முதலமைச்சர் கோப்பை மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளுக்கு செல்லும் வீரர், வீராங்கனைகளை வாழ்த்தி, ஊட்டியில் இருந்து சென்னை வரை அழைத்து செல்லும் அரசு பேருந்தினை கலெக்டர் அம்ரித் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஊட்டி வருவாய் கோட்டாசியர் துரைசாமி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் இந்திரா, ஊட்டி வட்டாட்சியர் சரவணகுமார், மாவட்ட கால்பந்து பயிற்றுநர்கள், தடகள பயிற்றுநர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க சென்னை சென்ற நீலகிரி மாணவர்கள் appeared first on Dinakaran.

Related Stories: