வட்டார கல்வி அலுவலகத்தில் பாமகவினர் மனு

மல்லசமுத்திரம்: குறுக்கலாம்பாளையம் நடுநிலைப்பள்ளி ஆசிரியரை மாற்றக்கோரி, மல்லசமுத்திரம் பேரூராட்சி 1வது வார்டு பாமக கவுன்சிலர் சரவணன், வட்டார கல்வி அலுவலக கண்காணிப்பாளர் தங்கமணியிடம் மனு அளித்தார்.மனுவில் அவர் கூறியிருப்பதாவது:மல்லசமுத்திரம் பேரூராட்சி, குறுக்கலாம்பாளையம் நடுநிலைப் பள்ளியில், 152 மாணவர்கள் படித்து வருகின்றனர். 5ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கும் ஆசிரியர் ஜெயசீலன் என்பவர், பள்ளி வேலை நாட்களில் வருகை பதிவேட்டில் கையொப்பமிட்ட பின்பு, மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்திற்கு சென்று அலுவலக பணியை மேற்கொள்கிறார். மேலும், பள்ளிக்கு வரும் ஒரு சில நாட்களில் அவரது, நீதிமன்ற வழக்குகள் சம்பந்தப்பட்ட தொலைபேசி அழைப்புகளுக்கு மட்டும் பதில் அளித்து நேரத்தை வீணடிக்கிறார். இதனால், மாணவர்களின் கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, ஆசிரியர் ஜெயசீலனை பணியிலிருந்து விடுவித்து வேறு ஆசிரியரை நியமிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார். அப்போது, மேற்கு ஒன்றிய செயலாளர் கணேசன், பாபு, சங்கர், வெங்கடாசலம், பேரூர் தலைவர் சித்துராஜ், பாரதி ஆகியோர் உடன் இருந்தனர்.

 

The post வட்டார கல்வி அலுவலகத்தில் பாமகவினர் மனு appeared first on Dinakaran.

Related Stories: