பாஜவை கைவிட்ட நிதிஷ், லாலு தண்டிக்கப்பட வேண்டும்: ஒன்றிய அமைச்சர் அமித் ஷா ஆவேசம்

முங்கர்(பீகார்): பாஜவை கைவிட்ட நிதிஷ், லாலு தண்டிக்கப்பட வேண்டும்என ஒன்றிய அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். பீகாரின் முங்கர் நாடாளுமன்ற தொகுதியில் லக்கிசராய் பகுதியில் நடந்த பாஜ நிகழ்ச்சியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டு பேசினார். அப்போது, “பீகார் மாநில வளர்ச்சிக்கு நிதிஷ் அரசு எதையும் செய்யவில்லை. ஆனால் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு மோடி அரசு எண்ணற்ற நலதிட்டங்களை செய்துள்ளது.

நிதிஷ் எப்போதுமே தனது கூட்டணியை மாற்றி கொண்டு லாலு பிரசாத்தை தவறாக வழி நடத்துகிறார். மகாபந்தன் கூட்டணிக்காக பாஜவை கைவிட்ட நிதிஷ், லாலு தண்டிக்கப்பட வேண்டும். ராகுல் காந்தியை மக்கள் தலைவராக காண்பிக்க காங்கிரஸ் எடுக்கும் முயற்சிகள் தோல்வி அடைந்து விட்டன. பீகார் எப்போதும் ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறது. தலைநகர் பாட்னாவில் கடந்த 23ம் தேதி நடந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் ரூ.20 லட்சம் கோடிக்கு மேல் ஊழல் செய்தவர்கள். 2024 மக்களவை தேர்தலில் ஊழல் அரசியல் தலைவர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் கற்பிப்பார்கள்” இவ்வாறு தெரிவித்தார்.

The post பாஜவை கைவிட்ட நிதிஷ், லாலு தண்டிக்கப்பட வேண்டும்: ஒன்றிய அமைச்சர் அமித் ஷா ஆவேசம் appeared first on Dinakaran.

Related Stories: